Halloween Costume ideas 2015

அந்தரங்கம் (+18)இன்ப வெள்ளத்தில் முழுமையாக நீந்த

முதலிரவன்று பெண்களின் மனதில் எழும் எண்ணங்கள்…

night-500x500 

திருமணம், முதலிரவு போன்றவை மீது ஆசை அலைபாயும். ஆனால், அந்த தருணத்தில் நிற்கும் நபர்கள் அனைவரும் பெரும்பாலும் பதட்டமாக தான் காணப்படுவார்கள். காதல் திருமணத்தில் இந்த பதட்டம் குறைவாக தான் இருக்கும்.

ஆனால், நிச்சயம் செய்த திருமணத்தில் தான் பதட்டம் உச்சி முதல் கால் வரை தொற்றிக் கொள்ளும். புதிய இடம், பெரிதாய் தெரியாத நபர். அவருடன் முதன் முதலில் படுக்கையை பகிர்ந்துக் கொள்ளும் தருணம்.

தன்னை பற்றி அவர் என்ன எண்ணுவார், அவர் எப்படி நடந்துக் கொள்வார் என்ற பெண்களின் எண்ணம் என எண்ணங்களால் சூழ்ந்திருக்கும் இடம் அது. ஆனால், இவ்விடத்தில் கூட உறவை தாண்டிய சில கேலித்தனமாக, அபத்தமானவற்றை பெண்கள் சிந்திக்கிறார்கள்….

மேக்கப்???
முதலிரவின் போது தனது மேக்கப்பை முழுமையாக களைத்துவிடலாமா? வேண்டாமா என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் இருக்கிறதாம்.

குளியலறை
வெளியிடங்களுக்கு சென்று வேறு ஒருவரது குளியலறையை ஒருமுறை பயன்படுத்தவே பெண்கள் நிறைய தயங்குவார்கள். இதில், நாளையிலிருந்து வேறு ஒரு நபரின் குளியலறையை தான் பயன்படுத்த வேண்டுமா? என்ற எண்ணமும் அவர்களிடம் அதிகம் எழுகிறது.

குறட்டை
தப்பி தவறியும் குறட்டை வந்துவிடக் கூடாது, மானமே போய்விடும் என்று பெண்கள் எண்ணுகிறார்கள். இதுவே, கணவன் குறட்டை விட்டால் என்ன செய்வது என்று குழம்புவார்கள்.

எழுவதற்கு முன் மேக்கப்
இரவில் மேக்கப் களைப்பதிலும், பகலில் அவன் எழுந்திருக்கும் முன்னரே மேக்கப் போட்டுவிட வேண்டும் என்றும் கூட சில பெண்கள் எண்ணுகிறார்கள்.

வாய் துர்நாற்றம்
வாய் துர்நாற்றம் என்பது மிகவும் பொதுவானது. காலையில் அனைவருக்கும் தான் இது இருக்கும். ஆனால், புதிய நபர் அவரிடம் காலை வணக்கம் சொல்லும் போதே வாய் துர்நாற்றம் வந்துவிட்டால் என்ன செய்வது?

உறங்கும் போதும் அழகு
மேலும் உறங்கும் போதும் தாங்கள் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் இருக்கிறதாம்.

அவன் எப்படி இருப்பான்
தூங்கி எழுந்த பிறகு அவன் (கணவன்) எப்படி இருப்பான்? எவ்வாறு நடந்துக் கொள்வான், என்ன பேசுவான் என்பது பற்றி யோசித்துக் கொண்டே இருப்பார்களாம்.

வாசலில் ஓடிப்போய் நிற்க வேண்டுமா?
காலை கணவன் அலுவலகம் அல்லது வெளியே செல்லும் போது வாசல் அருகே ஓடி வந்து “என்னங்க பாத்து போங்க.. டாட்டா..” என்றெல்லாம் கூற வேண்டுமா என யோசிக்கிறார்கள்.

இரவு ஆடை
எத்தனை நாட்களுக்கு புடவைக் கட்டிக்கொண்டு உறங்க வேண்டும், இரவு உடை அணிந்து உறங்கலாமா, எப்போதிருந்து.. என்பது பற்றியெல்லாம் கூட பெண்கள் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

நேரதாமதம்
ஒருவேளை நேரதாமதமாக எழுந்துவிட்டால் தவறாக எடுத்துக் கொள்வார்களோ… புதிய சூழல் எப்படி இருக்கும் என்பது பற்றி எல்லாம் கூட பெண்கள் யோசிக்கிறார்கள்.

நான் எங்க இருக்கேன்….?
பெரும்பாலும், முதலிரவன்று தூங்கி எழுந்த பெண்களுக்கு எழும் முதல் எண்ணம், “நான் எங்க இருக்கேன்..?”. பெண்களின் மனது கண்டதை எல்லாம் யோசிக்கும் என்று தெரியும். ஆனால், இந்த அளவிற்கு யோசிக்கும் என்பது இப்போது தான் தெரிகிறது.

கருத்துரையிடுக

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget