Halloween Costume ideas 2015

அந்தரங்கம் (+18)இன்ப வெள்ளத்தில் முழுமையாக நீந்த

படுக்கை அறை எச்சரிக்கை!: ஆபாச படம் பார்ப்பதில் அடிமையானவர்களா நீங்கள்? -அந்தரங்கம் (+18)

 images-a005
ஆபாசப் படங்களைப் பார்ப்போரால் படுக்கை அறையில் சிறப்பாக செயல்பட முடியாதாம். ஒரு ஆய்வு இப்படி எச்சரிக்கிறது. ஆண்கள் தான் பெருமளவில் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கின்றனர். பெண்களிலும் ஆபாசப் படம் பார்ப்போர் உண்டு. அவர்களின் எண்ணிக்கை குறைவுதான். இப்படி ஆபாசப் படம் பார்க்கும், குறிப்பாக இன்டர்நெட்டில் ஆபாசப் படங்களை அடிக்கடி பார்ப்போரால், படுக்கை அறையில் நிஜமான செக்ஸ் நடவடிக்கையில் முழுமையாக செயல்பட முடியாமல் போகிறதாம்.


செக்ஸ் விஷயங்களை வீடியோவில் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டும் நபர்களால் உண்மையில், நிஜமான செக்ஸ் விஷயங்களை முழுமையாக, சரியாக நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறதாம். இதனால் பல பிரச்சினைகளுக்கு அவர்கள் ஆளாவதாக இந்த ஆய்வுகூறுகிறது.
வீடியோவில் செக்ஸ் உறவுகளைப் பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தில் பாதியளவு கூட ஆண்களால் படுக்கை அறையில் காட்ட முடிவதில்லையாம்.
இதற்கு முக்கியக் காரணம், மூளையின் உற்சாக மையத்தை தூண்டி விடக் கூடிய ஹார்மோனான, டோபமைன் அபரிமிதமான அளவில் சுரப்பதே. அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படுவோருக்கு டோபமைன் அதிக அளவில் சுரந்து, சுரந்து கடைசியில், உண்மையான இன்பத்தை அனுபவிக்க நேரிடும்போது அதனால் பலன் இல்லாமல் போய் விடுகிறதாம்.

இப்படி ஆபாசப் படம் பார்த்து உண்மையான உற்சாகத்தையும், இன்பத்தையும் தொலைத்து நிற்கும் பலரும் தற்போது செக்ஸ் கவுன்சிலிங்குக்கு அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளனராம்.
இதுகுறித்து செக்ஸாலஜிஸ்ட் ஒருவர் கூறுகையில், ஆபாசப் படம் பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் உள்ளது. இன்டர்நெட் மூலம் ஆபாசப் படம் பார்ப்போர் பெருமளவில் பெருகி விட்டனர். இதனால் உண்மையான செக்ஸ் நடவடிக்கைகளில் இவர்களால் ஈடுபடுவதில் பல சிரமங்களைச் சந்திக்கின்றனர்.

அதிக அளவிலான செக்ஸ் நடவடிக்கைகளைப் பார்த்துப் பார்த்து இவர்கள் மன ரீதியாக களைத்துப் போய் விடுகின்றனர். அதில் ஒரு சலிப்பும், அலுப்பும் வந்து விடுகிறது. டோபமைன்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.
இப்படிப்பட்ட செக்ஸ் பட அடிமைகள், படிப்படியாக ஆபாசப் படம் பார்ப்பதை நிறுத்திக் கொள்வது நல்லதாம். அதை நிறுத்த முடியாதவர்களுக்கு மருந்து, மாத்திரைகள், கவுன்சிலிங் போன்றவற்றைத் தருகிறார்களாம் செக்ஸாலஜிஸ்ட்டுகள்.

எனவே வாலிப வயோதிகர்களே, எப்போதும் நிழலை நம்பாதீர்கள், தேவைப்படும்போது நிஜத்தை நாடுவதே மன நலனுக்கும், உடல் நலனுக்கும் நல்லது.

கருத்துரையிடுக

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget