Halloween Costume ideas 2015

அந்தரங்கம் (+18)இன்ப வெள்ளத்தில் முழுமையாக நீந்த

படுக்கையறை போர்க்களத்தில் வெல்ல வேண்டுமா?


How Win The War
படுக்கையறை என்பது சந்தோசமான போர்க்களம். தாம்பத்ய உறவின் போது தம்பதியரிடையே வெற்றி தோல்வி ஏற்படுவது சகஜம்தான். இதில் வெற்றி பெற்றவரை விட தோல்வியடைந்தவர்களுக்குதான் மகிழ்ச்சி அதிகம் ஏற்படுவதாக கூறுகின்றனர் அனுபவசாலிகள். சுவாசக்காற்றும் சிலிர்ப்பை ஏற்படுத்தும், சின்ன சின்ன வலிகள் கூட சந்தோசத்தை தரும் என்கின்றனர் நிபுணர்கள். படுக்கையறைப் போர்களத்தில் துணையை வெல்ல அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

சின்னச் சின்னக் கொஞ்சல்கள்...

வீட்டில் பிற இடங்களில் துணையை சந்திப்பதற்கும், படுக்கை அறையில் துணையை தனியாக சந்திப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. வீட்டில் பெரியவர்கள், குழந்தைகள் இருந்தால் அவர்கள் முன்னிலையில் பெயரைச் சொல்லி அழைக்கும் கணவர்கள் படுக்கை அறையில் தங்களை செல்லப் பெயரிட்டுக் கொஞ்சவேண்டும் என்று மனைவிகள் விரும்புகின்றனர்.

தோல்வியை விரும்பும் மனைவி

மொசக்குட்டி, பூனைக்குட்டி, தேவதை, குட்டிப்பிசாசு.... இப்படி ஏதாவது ஒரு பெயரிட்டு கொஞ்சினால் உங்களின் செல்லக் கொஞ்சலில் கிறங்கிப்போகும் மனைவி படுக்கை போர்க்களத்தில் தாங்களாவே விரும்பி தோற்றுப்போகின்றனராம்.

கணவருக்கும் பிடிக்கும்...

கணவர் மட்டும்தான் கொஞ்சவேண்டும் என்றில்லை. மனைவியும் கொஞ்சலாம். செல்லக்குட்டி... கன்னுக்குட்டி... ராட்சஷா... இப்படி சின்னச் சின்னதாய் கணவரைக் கொஞ்சிப் பாருங்களேன். அப்புறம் தலையணை மந்திரமெல்லாம் தேவையில்லை என்கின்றனர் அனுபவசாலிகள்.

என்ன பிடிக்கும் தெரியுமா?

சமையலறையில் பார்த்துப் பார்த்து எப்படி சுவையோடு சமைத்து பரிமாறுகிறோமோ அதேபோல படுக்கையறையிலும் பார்த்து பார்த்து பதமாய் நடந்து கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்பொழுதுதான் உறவில் சுவை கூடுமாம் .

அகிம்சையான இம்சை...

படுக்கை அறை போரில் சின்னச் சின்ன காயங்கள் சகஜம்தான் கம்மலின் கீறல், நகத்தினால் ஏற்படும் காயம், பற்களினால் ஏற்படும் காயங்கள் இப்படி ஏற்படும் காயங்கள் அகிம்சையான இம்சைதான் என்கின்றனர் சில தம்பதியர். இந்த காயங்கள் மகிழ்ச்சியையும், அதே சமயம் வேகத்தையும் அதிகரிக்குமாம்.

கிசுகிசுப்பான பேச்சு

அந்தரங்கமான நேரத்தில் கிசுகிசுப்பாய் பேசுவது உற்சாகத்தை அதிகரிக்குமாம். இந்த நேரத்தில நீ தேவதை மாதிரி இருக்கே என்று சும்மாவாச்சும் சொல்லிப் பாருங்களேன்... அப்படியே சொக்கிப்போவாராம் உங்கள் மனைவி. அப்புறம் என்ன வெற்றி உங்கள் பக்கம்தான்.

விட்டுக்கொடுக்கும் மனைவி

படுக்கை அறை போர் என்பது வின்- வின் கொள்கை மாதிரிதான். யார் ஜெயித்தாலும், யார் தோற்றாலும் தம்பதியர் இருவருக்குமே மகிழ்ச்சிதான், நன்மைதான். இதில் சில நேரங்களில் மனைவியின் கை ஓங்கினாலும் போனால் போகிறது என்று விட்டுக்கொடுக்கும் மனைவிகளும் இருக்கத்தான் செய்கின்றனராம்.
Labels:

கருத்துரையிடுக

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget